நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான விளம்பரங்களை அகற்றியது Airbnb

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலும், கூட்டுரிமை வீடுகளிலும் இரண்டு மூன்று நாள்களுக்குத் தங்கும் வாடகை வசதி இருப்பதாக வந்த விளம்பரங்களை Airbnb தளம் நீக்கியிருக்கிறது.

அதுபோன்ற 15க்கும் அதிகமான விளம்பரங்கள் இருந்ததை CNA பார்த்தது.

விளம்பரங்கள் பல மாதங்கள் வரை தளத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

அதுபற்றி CNA விசாரித்தபோது Airbnb பேச்சாளர் உள்ளூர்ச் சட்டத்தை மதித்து நடக்கும்படி அதன் வாடிக்கையாளர்களிடம் கூறியதாகச் சொன்னது.

தளத்தில் உள்ள அத்தகைய விளம்பரங்களை நீக்கச் சொல்லிவிட்டதாகவும் அது சொன்னது.

சிங்கப்பூரில் தனியார் வீடுகளை மூன்று மாதத்துக்குக் குறைவாக வாடகைக்கு விட முடியாது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை 6 மாதத்துக்குக் குறைவாக வாடகைக்கு விடுவதும் குற்றம்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset