நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சொல் பேச்சை கேட்காத போலிஸ் கணவன்; இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டவரை எரித்து கொன்ற பெண் போலிஸ் 

ஜாகர்த்தா:

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட தனது கணவரை போலிஸ் பெண்ணான மனைவி எரித்துக் கொன்றுள்ளார்.

அந்த தீய பழக்கத்திலிருந்து விடுபடுமாறு பலமுறை எடுத்துக் கூறியும் கேட்காத அந்த கணவரும் ஒரு போலிஸ் அதிகாரிதான். இணைய சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த போலிஸ் அதிகாரியான கணவனின் பழக்கத்தை சகிக்க முடியாத மனைவி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இனி இவரை திருத்தவே முடியாது என்பதால் ஓர் அதிரடியான முடிவை எடுத்தார்.

கோபம் அடங்காத அப்பெண் கணவரை எரித்துக் கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் கிழக்கு ஜாவாவில் உள்ள மோஜோகெர்டோ போலிஸ் விடுதி வளாகத்திற்கு அருகிலுள்ள அவர்களின் வீட்டில் நடந்தது.

தீக்காயங்களுடன் அவ்வாடவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் பலத்த தீக்காயங்களால் இறந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலிஸ் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

சந்தேக நபர் குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தச் செயலைச் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மோஜோகெர்டோ கோத்தா போலிஸ் தலைவர் டேனியல் எஸ் மருன்டுரி இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset