
செய்திகள் இந்தியா
சூரியப் புயலின் புதிய புகைப்படத்தை ஆதித்யா எல் 1 வெளியிட்டது
ஶ்ரீ ஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரோ இவ்வாண்டு மே மாதம் 11-ஆம் தேதி பூமியைத் தாக்கியச் சூரியப் புயலின் விரிவான புகைப்படங்களை ஆதித்யா எல்1 விண்கலத்திலிருந்து வழங்கியுள்ளது.
சூரியனில் பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய சூரிய புள்ளிகளில் ஒன்றான AR13664 என்ற செயலிலுள்ள பகுதி, மே 8-9-ஆம் தேதிகளில் கரோனல் மாஸ் எஜெக்ஷன்களுடன் (CMEs) தொடர்புடைய பல சக்திவாய்ந்த எக்ஸ்-கிளாஸ் மற்றும் எம்-கிளாஸ் எரிப்புகளை வெடித்தது.
இது பூமியில் இந்தப் புவி காந்த புயலைத் தூண்டியது.
சூரிய புயல் தாக்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அரிய துருவ ஒளி நிகழ்வைப் பார்க்க முடிந்தது.
இந்த ஒளி வெள்ளத்தில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது.
அதோடு, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. இந்த முறை இளஞ்சிவப்பு நிறமும் காணப்பட்டது.
பூமியைச் சூரிய பூயல் தாக்கும்போது மின்கட்டமைப்புகள், தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.
இதனிடையே சூரிய புயலால் வானில் உருவான ஒளிவெள்ளத்தைக் கண்டு ரசித்த மக்கள் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
துருவ ஒளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm