நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

முஸ்லிம் சிறுமிகளைக் குறி வைத்து இழிவாக சித்தரிக்கப்பட்ட 'ஹமாரே பாரா' ஹிந்தி திரைப்படத்தை திரையிட கர்நாடக அரசு தடை 

பெங்களூரு: 

கர்நாடகத்தில் இன்று வெளியாக இருந்த 'ஹமாரே பாரா' ஹிந்தி திரைப்படத்தை இரண்டு வாரங்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ  கூடாது என கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஹிந்தி திரைப்படமான 'ஹமாரே பாரா' முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளைக் குறி வைத்து இழிவாக சித்தரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, இந்த படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடகத்தில் படத்தை வெளியிட்டால் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'ஹமாரே பாரா' திரைப்படத்தை இரண்டு வாரங்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை வெளியிடவோ அல்லது ஒளிபரப்பவோ கூடாது என கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

படத்தின் டிரெய்லரைப் பார்த்த பிறகு அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கர்நாடக திரைப்பட ஒழுங்குமுறை சட்டம் 1964, பிரிவுகள் 15(1) மற்றும் 15(5) ஆகியவற்றின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாநில அரசின் உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை இயக்குநர் அலோக் மோகன் எச்சரித்துள்ளார். 

இந்த சர்ச்சைக்குரிய திரைப்படம் நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை(ஜூன் 7) ஆம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் வெளியீட்டை எதிர்த்து குறிப்பிட்ட மத சமூக ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றும் ஜூன் 14 ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

இந்த திரைப்பட்டத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில்  முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset