செய்திகள் வணிகம்
உலக தமிழ் வர்த்தகர்களை ஒன்றிணைக்கும் எழுமின் மாநாடு இனிதே தொடங்கியது
டாவோஸ்:
உலகத்தில் இருக்கும் தமிழ் தொழில் முனைவோர், திறனாளர்களை ஒன்றிணைக்கும் 13 வது எழுமின் மாநாடு சுவிட்ச்லாந்து டாவோஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த மாநாட்டில் மலேசியா உட்பட 30க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 450 பேராளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்குள் வர்த்தக பரிமாற்றங்களை முன்னெடுக்கும் முயற்சியாக எழுமின் அமைப்பு தொடர்ந்து இம்மாநாட்டை நடத்தி வருகின்றது.
உலக அரங்கில் தமிழர்களின் வர்த்தகம் விரிவடைய வேண்டும் என்பதை அடித்தளமாகக் கொண்டு பலர் வர்த்தக பரிமாற்றங்களை இந்த மாநாட்டில் முன்னெடுத்து வருகின்றார்கள்.
கனடா, இந்தியா, ஐக்கிய அரபு சிற்றரசு, இங்கிலாந்து, அமெரிக்கா, வியட்நாம் கம்போடியா போன்ற நாடுகளில் இந்தியர்கள் எம்மாதிரியான வர்த்தக வாய்ப்புகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் இந்த மாநாட்டில் பேசப்பட்டது.
ஜூன் ஏழாம் தேதி தொடங்கி ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் இறுதியில் நூற்றுக்கும் அதிகமான வர்த்தக பரிமாற்றங்கள் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலேசியாவில் இருந்து 30 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள். எஸ் பி கேர் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் மலேசியக் குழுவிற்கு தலைமை ஏற்று இருக்கின்றார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
ஆர்சிபி அணி படத் தயாரிப்பு நிறுவனத்திடம் விலை பேசப்படுகிறது?
November 14, 2025, 4:21 pm
