செய்திகள் மலேசியா
மின்னிலக்க உலகில் அனைவரும் இணைந்திருப்பது உறுதி செய்யப்படும்: பிரதமர் உறுதி
புத்ராஜெயா:
அரசாங்கம் செயல்படுத்தி வரும் திட்டங்களின் முடிவில், அனைத்து மலேசியர்களும் மின்னிலக்க (டிஜிட்டல்) உலகில் அனைவரும் இணைந்திருப்பது உறுதி செய்யப்படும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
நேற்று மலேசிய தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இணைய வசதி, 5ஜி தொழில்நுட்பம் குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமர், கிழக்கு மலேசியாவுக்கான சில ஒதுக்கீடுகள் பற்றியும் குறிப்பிட்டார்.
“இரு மாநிலங்களுக்குமான அகண்டவரிசை (Broadband service) சேவை மேம்படுத்தப்படும். யாரும் பின்தங்கவில்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்யும். மின்னிலக்க உலகில் அனைவரும் இணைந்திருப்பார்கள்.
"இந்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் முழுமையடையும்போது, மலேசியர் தரமான இணைய இணைப்பை பெறுவதன் பொருட்டு மரங்களின் மீது ஏறத்தேவையில்லை. அதுபோன்ற நிகழ்வுகள் குறித்து நாம் கேட்க வேண்டியிருக்காது," என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி உறுதி அளித்தார்.
சபாவை சேர்ந்த Veveonah Mosibin என்ற மாணவி, மோசமான இணைய இணைப்பின் காரணமாக தமது தேர்வுகளை இணையம் வழி எழுத சிரமப்படுவதாகக் கூறி இருந்தார்.
மேலும், வீட்டின் அருகே உள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்து இணைய வகுப்பில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டு, கடந்த ஆண்டு காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பிரதமர் மேற்கண்டவாறு கூறியதாகத் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 12:01 pm
சிலாங்கூரில் 387 சிறார் சித்திரவதை சம்பவங்கள் பதிவு: ஹூசேன் ஓமார் கான் தகவல்
November 14, 2024, 10:56 am
சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளத்தைக் கையகப்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டது: அமீர் ஹம்சா
November 14, 2024, 10:55 am
மனித கடத்தலுக்கு ஆளாக்கப்படுவதில் இருந்து தகவல் தொடர்புத் துறை பட்டதாரிகள் கவனமாக இருக்க வேண்டும்: போலிஸ்
November 14, 2024, 10:23 am
இந்திய முஸ்லிம் சமூகப் பிரச்சினைகள் குறித்து பினாங்கு ஆளுநரிடம் விவாதிக்கப்பட்டது: ஹமித் சுல்தான்
November 14, 2024, 10:14 am
ஜப்பான் மக்களின் பணி கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கு அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்: ஷாரில் எஃபெண்டி
November 14, 2024, 8:51 am
பெருவின் உயரிய விருதான எல் சோல் டெல் பெரு விருதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பெற்றார்
November 13, 2024, 6:31 pm
மக்களவையில் கணபதிராவின் புகார்களை கேட்டு அழுது விட்டேன்: அஹ்மத் ஃபாட்லி
November 13, 2024, 6:08 pm
ஃபேஷன் வேலட் நிறுவனர்களுக்கு எதிரான விசாரணை ஆறாவது நாளாக தொடர்கிறது: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
November 13, 2024, 6:04 pm