நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது: பேராக் போலிஸ் நடவடிக்கை

ஈப்போ: 

சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். 

பேராக் மாநில இடைக்கால காவல்துறை தலைவர் சுல்கஃப்லி சரி ஆட் இதனை உறுதிப்படுத்தினார் 

காவல்துறயினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 31 முதல் 50 வயதுக்குட்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாகச் அவர் சொன்னார் 

அதுமட்டுமல்லாமல், காவல்துறையினர் சுமார் 49 சேவல்களைப் பறிமுதல் செய்தனர். அதோடு 22 விவேக கைப்பேசி, 18,314 ரிங்கிட் ரொக்க பணத்தையும் கைப்பற்றினர். 

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு விலங்குகள் நல சட்டத்தின் செக்‌ஷன் 32(2)இன் கீழ் உம் 1953ஆம் ஆண்டு சூதாட்ட மைய சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுவதாக அவர் சொன்னார் 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset