நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டெலிகிரெம், வி சாட் ஆகியத் தளங்கள் நாட்டில் செயல்பட  உரிமம் பெறும் செயல்முறையைத் தொடங்கியுள்ளன: எம்சிஎம்சி

கோலாலம்பூர்: 

டெலிகிரெம், வி சாட் ஆகியத் தளங்கள் நாட்டில் செயல்பட  உரிமம் பெறும் செயல்முறையைத் தொடங்கியுள்ளன என்று மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி தெரிவித்துள்ளார். 

இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் புதிய உரிம விதிமுறைகளைக் கடைபிடிப்பதற்கான உறுதிப்பாட்டை எம்சிஎம்சி இரண்டு தளங்களையும் பாராட்டியது.

இரண்டு தளங்களும் விரைவில் மலேசியாவில் செயல்பட தேவையான தேவைகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உரிமம் பெறுவதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் அனைத்துச் சேவை வழங்குநர்களும் தங்கள் விண்ணப்பங்களை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எம்சிஎம்சி  நினைவூட்டியது.

உரிமத் தேவைகளுக்கு இணங்கத் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு வழிவகுக்கும். 

புதிய உரிமக் கட்டமைப்பு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும்போது இதுபோன்ற விளைவுகளைத் தவிர்க்குமாறு நிறுவனங்களை எம்சிஎம்சி வலியுறுத்தியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset