நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனது மகனுக்குக் குடியுரிமை வழங்க கோரி இந்தோனேசிய மாது கூட்டரசு நீதிமன்றத்தில் மனு

கோலாலம்பூர் : 

தன் மகனுக்கு,  மலேசியக் குடியுரிமையைக் கொடுக்க மறுத்த   மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய  கோரி கூட்டரசு நீதிமன்றத்தில் இந்தோனேசிய மாது மனு சமர்ப்பித்தார். 

கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி 40 வயதுடைய அம்மாது கூட்டரசு நீதிமன்றத்தில் தேசிய பதிவிலக்காவின் இயக்குநர் ,  அரசாங்கம் ஆகிய இரண்டையும்  பிரதிவாதிகளாக குறிப்பிட்டு மனு சமர்ப்பித்தார். 

மேலும், அம்மாதுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.  ஸ்ரீமுருகன் இந்தத் தகவலை  உறுதி செய்தார். 

2000-ஆம் ஆண்டு , மலேசிய குடிமகனைத்  திருமணம் செய்து கொண்ட அம்மாது  2004,  2010- ஆம் ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 

இதனைத் தொடர்ந்து, அவ்விரு குழந்தைகளுக்கும்  பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இரண்டாவது மகனுக்கு  12 வயதாக இருந்தபோது, ​​அவர் மலேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தார்.

ஆனால் மகன் தந்தையின் சாயலைக் கொண்டிருக்கவில்லை என்று அதிகாரிகள் கண்டறிந்த நிலையில் 
மகனுக்கு அடையாள அட்டை வழங்க மறுத்தனர். 

இதனையடுத்து,  இவ்வழக்கு மேலதிக விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

விசாரணையின் போது, ​​அம்மாதுவின் கணவர் அக்குழந்தை தனக்குப் பிறந்த  குழந்தை  இல்லை  என்றும்,  மரபணு (டிஎன்ஏ  ) பரிசோதனை செய்யவும் மறுத்துவிட்டார்.

இதனால், மகனின் பிறப்பு சான்றிதழைத் தேசிய பதிவிலக்காத் துறை மீட்டுக் கொண்டது. 

விசாரணை இன்னும் முடிவடையாததால் , அடையாள அட்டை  வழங்குவதிலும்  தாமதம் ஏற்பட்டது. 

எனவே, தனது மகன் மலேசிய குடிமகன் என்று உறுதிப்படுத்துவதுடன் ,  பிறப்புச் சான்றிதழைத் திருப்பித் தரவேண்டி  தேசிய பதிவிலக்காவிடம் கோரியுள்ளார். 

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி, உயர் நீதிமன்றம்  வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், மேல்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 29-ஆம் தேதி அந்த வழக்கின் தீர்ப்பை உறுதி செய்தது.

- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset