நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவத் துறையின் அலட்சியத்தால் தினகரனுக்கு 1.8 மில்லியன் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தைப்பிங்:

மருத்துவத் துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் பாதுகாவலர் தினகரனுக்கு 1.8 மில்லியன் இழப்பீடு வழங்க தைப்பிங் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பி. தினகரன் சிகிச்சைக்காக தைப்பிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெறும் போது மருத்துவர்களின் அலட்சியத்தால்  அவரின் மூளையில் காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தைப்பிங் மருத்துவமனை மருத்துவர்களான முஹ்ஹமத் ஹஸ்வான் சூல்கிஃப்ளி, மோகன்ராஜ் சுந்தரம்,நோர் சலிஸா இக்மா முஹ்ஹமத் யூசோப் ஆகியோர் மீது தினகரன் வழக்கு தொடுத்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளால் தங்கள் கூற்றை நிருபிக்க முடியாமல் போன நிலையில் தினகரனின் வாதம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி நூர் ருவேனா அவருக்கு சாதகமாக இந்த தீர்ப்பு வழங்கினார்.

தினகரன் சிகிச்சையின் போது எதிர்நோக்கிய மனஅழுத்ததிற்கும் துன்பங்களுக்கும் இழப்பீடாக 1.8 மில்லியன் வழங்கப்பட வேண்டும் என்று அவர்  தீர்பளித்தார்.

- கௌசல்யா ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset