நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ராட்சத ராக்கெட்டில் சீனக்கொடி இடம்பெற்ற விவகாரம்: தங்காக்கில் பரபரப்பு 

ஜொகூர் பாரு: 

ராட்சத் ராக்கெட்டில் சீனக்கொடி இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக தங்காக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது என்று கம்பீர் சட்டமன்ற உறுப்பினர் ஷரிஹான் ஜனி தனது வருதத்தை வெளிப்படுத்தினார். 

ராட்சத ராக்கெட்டில் சீன கொடி உள்ளது தொடர்பாக தங்காக மாவட்ட மன்றத்தினர்களிடமிருந்து விளக்கம் பெறப்பட்டதாக அவர் சொன்னார் 

MDT தரப்பு கொண்டு வந்த செயல்பாட்டு தர விதிமுறைகளின் கீழ் நிகழ்ச்சி அல்லது அலங்காரங்கள் இடம்பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று தான் உத்தரவிட்டதாக அவர் சொன்னார் 

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அனைத்து தரப்பினருக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் சொன்னார் 

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக கம்பீர் காவல்துறையினர் ஒரு போலிஸ் புகாரைப் பெற்றதாக தங்காக் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன்ட் ரொஸ்லான் முஹம்மத் தலிப் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset