நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய முதலை; சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம்

புருணை:

நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய முதலையில் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புருணையில் உள்ள ஜாலான் பினான்சோங், டுண்டோன் அருகே நெடுஞ்சாலையில் முதலை ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த முதலையை மோதி கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதே வேளையில் அக்காரின் டயரும் கழன்றி சாலையில் கிடந்தது.

விபத்துக்குள்ளான அம்முதலையில் படம் சமூக வலைத் தளங்களில் வைரலாகியுள்ளது.

இவ்வளவு பெரிய முதலையா என பலர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

அதே வேளையில் ஓட்டுநர் எப்படி முதலையைச் சாலையில் கவனிக்கத் தவறிவிட்டார் என்றும்  கேள்வி எழுப்பினர்.

ஓட்டுநர் காரை அதிக வேகத்தில் செலுத்திருக்க வேண்டும் என்றும் பலர் ஊகித்துள்ளனர்.

- நந்தினி ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset