செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு விலை சரிவடைந்துள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ321 பயணிகள் விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்கு விலை சரிந்தது.
அச்சம்பவம் நிகழ்ந்த பிறகு முதன்முறையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்குகள் விற்பனைக்கு விடப்பட்டபோது இந்நிலை உருவானது. எனினும், இதனால் அந்நிறுவனத்துக்குப் பெரிய அளவில் நிதி சார்ந்த பாதிப்பு ஏதும் இருக்காது என்று நம்பப்படுவதாகப் பங்குத்தாரர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு விலை வியாழக்கிழமை காலை 0.9 விழுக்காடு குறைந்து 6.70 வெள்ளியாகப் பதிவானது.
அந்நிறுவனத்தின் 4.2 மில்லியன் பங்குகள் வர்த்தகத்தில் இடம்பெற்றன. அந்த எண்ணிக்கை சற்றுக் குறைவானதாகக் கருதப்படுகிறது.
பங்குச் சந்தை திறந்துவிடப்பட்டபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்கு விலை 1.6 விழுக்காடு சரிந்தது. ஆனால் விரைவில் மீண்டு வரவும் செய்தது.
செவ்வாய்க்கிழமையன்று (மே 21) எஸ்கியூ321 விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதால் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் உயிரிழந்தார். அச்சம்பவத்தில் மேலும் பலர் காயமுற்றனர்.
அந்த விமானம் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்துக்கு மாற்றிவிடப்பட்டது.
கடந்த இரு நாள்களில் பெரும்பாலான பயணிகள் சிங்கப்பூர் திரும்பிவிட்டனர். புதன்கிழமை (மே 22) நிலவரப்படி 20 பேர் இன்னும் பேங்காக் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இருக்கின்றனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 12:24 pm
அடுத்த வார ரிங்கிட் மதிப்பில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
April 30, 2026, 12:58 pm
தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் மலேசியா: ஏர்டிரங்க் நிறுவனத்தின் RM27 பில்லியன் ரிங்கிட் திட்டம்
April 30, 2026, 11:23 am
அன்னாசித் துறையில் புதிய புரட்சி: ஜொகூரில் தொழில்நுட்பப் பகிர்வு திட்டங்கள் தீவிரம்
April 29, 2026, 3:02 pm
அமெரிக்கா - ஈரான் மோதல்: அதிரடியாக உயர்ந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை
April 23, 2026, 2:55 pm
இன்று தங்க விலை சரிந்தது
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
