நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் அமைதியான முறையில் இன்று விசாக தினம் கொண்டாடப்படுகிறது

கோலாலம்பூர்:

புத்த மதத்தை நிறுவிய சித்தார்த்த கௌதமரின் பிறப்பு, ஞானம், மரணத்தை நினைவுகூரும் வகையில் மலேசியாவில் உள்ள பௌத்தர்கள் இன்று விசாக தினத்தை கொண்டாடுகின்றனர்.

குறிப்பாக கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள மகா விகாரா புத்த ஆலயத்தில் விசாக தினம் மிகவும் விமரிசையாகவும் அமைதியான முறையிலும் அனுசரிக்கப்படுகிறது.

இதே போன்று நாடு முழுவதும் உள்ள புத்தர் ஆலயங்களிலும் விசாக தினத்தை பல்லின மக்கள் ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர்.

கடந்த ஆண்டுகளைப் போலவே மலேசியாவில் விசாக தினத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

புத்தரின் மெய் ஞானத் தூய்மையைக் குறிக்கும் வகையில் ஊர்வலத்தின் போது, ​​பக்தர்கள் புத்த மதப் பாடல்களைப் பாடி, பௌத்த சின்னங்களை எடுத்து வந்தனர்.

இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வாலத்திற்கு வந்து பிரார்த்தனைகளை மேற்கொண்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset