நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கோளாறு ஏற்பட்ட விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கிய விமானி

நியூ சவுத் வேல்ஸ்:

ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள நியூகேஸில் விமான நிலையத்தில் இருந்து போர்ட் மெக்குவாரிக்கு சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் விமானி, 60 வயது முதியவர் மற்றும் 65 வயது மூதாட்டி என மொத்தம் 3 பேர் பயணித்தனர்.

முதியவருக்கு பிறந்தநாள் கொண்டாட அவர்கள் சென்றனர்.

உடனடியாக விமானத்தின் நிலைமை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து விமானம், சிறிது நேரம் விமான நிலையத்தையே சுற்றி பறந்தது. பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

விமானி விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 53 வயதான விமானி பீட்டர் ஷாட்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset