செய்திகள் கலைகள்
அன்னையர் தினத்தை முன்னிட்டு 'வருவாய் அம்மா' பாடல்கள் வெளியீடு
காஜாங்:
அன்னையர் தினத்தை முன்னிட்டு வருவாய் அம்மா பாடல்கள் யூ டியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.
உலக முழுவதும் அன்னையர் தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அன்னை தனது பிள்ளைகள் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அள்ளித் தரும் அளவிட முடியாத அன்பை, அவா்களின் ஒப்பற்ற பங்களிப்புகள், அவா்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும்.
அம்மா என்ற சொல்லை உச்சரிக்கும் போது நம் அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சி மிகுதியால் தத்தளிக்கின்றன.
அந்த வகையில் அன்னையரின் தியாகத்தை போற்றும் வகையில் நாடறிந்த கலைஞர் எம். ஜே. விஜேய் பாடிய அன்னையர் பாடல்கள் நேற்று யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஏ.எம்.ஸெட். புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் எமிகோஸ் அப்பு எழுதி எமிகோஸ் சுகுவின் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது.
சிலாங்கூர் மாநில மைபிபிபி இடைக்கால தலைவரும் உலு லங்காட் மைபிபிபி தொகுதித் தலைவருமான டாக்டர் சுரேந்திரன் தலைமையில் நேற்று இந்தப் பாடல்கள் யூ-டியூப் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்த பாடல்கள் வெளியீட்டை முன்னிட்டு டாக்டர் சுரேந்திரன் தலைமையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு 50 பேருக்கு விருந்து நிகழ்வு ஏற்பாடு செய்து சேலைகளும் வழங்கப்பட்டன. இதில் மைபிபிபியின் பாங்கி தொகுதித் தலைவர் குமாரும் கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 10:53 am
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் தகவல்
December 28, 2025, 10:18 pm
டில்லியில் நடைபெற்ற விருது விழாவில் சிவ ஸ்ரீ யோகேஸ்வர சிவாச்சாரியாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்
December 28, 2025, 10:12 pm
விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: இணையத்தில் வைரலான செயற்கை நுண்ணறிவு (AI) படங்கள்
December 26, 2025, 3:55 pm
“ஜன நாயகன்” திரைப்படத்தின் 3 ஆவது பாடலின் முன்னோட்டம் வெளியானது
December 20, 2025, 12:42 pm
திரைப்பட விழாவில் சசிகுமாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது
December 16, 2025, 2:41 pm
பிரபல ஹாலிவுட் இயக்குநர் மரணம்: கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்
December 16, 2025, 11:45 am
ஹைதராபாதில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலை திறப்பு
December 12, 2025, 3:41 pm
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த்
December 2, 2025, 8:32 am
