நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரேபரேலியில் உள்ள சலூனில் தனது தாடியை ‘டிரிம்’ செய்த ராகுல் காந்தி 

ரேபரேலி:

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது தாடியை ‘டிரிம்’ செய்து கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மக்களவைத் தோ்தலின் 5-ஆம் கட்டம் மே 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ரேபரேலியில் போட்டியிட தனது வேட்புமனுவை கடைசி நாளில் தாக்கல் செய்த ராகுல் காந்தி, அந்த தொகுதியில் தனது முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு திங்கள்கிழமை பேசினார்.

அப்போது, “எனது குடும்பத்துக்கு ரேபரேலி மக்களுடன் ஆழமான தொடா்புள்ளது. இதனால் நான் ரேபரேலியில் போட்டியிடுகிறேன். எனது குடும்பம் ரேபரேலி மக்களுக்காக எப்போதும் உழைத்து வந்துள்ளது. ஆனால் தொழிலதிபா்கள் அம்பானிக்காகவும், அதானிக்காகவும் மட்டுமே பிரதமா் மோடி உழைக்கிறாா்” என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரேபரேலியில் உள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று மாலை காரை நிறுத்திய ராகுல் காந்தி தனது தாடியை ‘டிரிம்’ செய்து கொண்டார்.

இந்த புகைப்படங்களை பகிரும் காங்கிரஸ் ஆதரவாளர்கள், இவரின் எளிமை ஈடு இணையற்றது எனப் புகழ்ந்து வருகின்றனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset