நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி பிரிந்து வாழ முடிவு: 11 ஆண்டுகள் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது 

சென்னை: 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளனர். இந்த தகவலை இருவரும் தங்களின் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தியினால் இருவரின் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர். 

கடந்த 2013ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

இருவருக்கும் 2022ஆம் ஆண்டு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. முன்னதாக, ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் விவாகரத்து பெற்று விட்டதாக நேற்று சமூக ஊடகங்களில் ஆருடங்கள் உலா வந்த நிலையில் இன்று இருவரும் அறிவித்துவிட்டனர். 

ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளனர். யார் இந்த சாலையோரம், யாரோ இவன் யாரோ இவன், பிறை தேடும் ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்க பாடல்களாகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset