செய்திகள் கலைகள்
தென்கிழக்காசியாவின் மர்மமான 'பில்லி சூனியம்': வெள்ளித்திரையில் விரிந்த 'காங் தாவ்' மந்திர உலகம்
கோலாலம்பூர்:
பேய்ஜி கோ, யோங் சூன் லின் இணை இயக்கத்தில் உருவான உள்ளூர் திகில் வகை திரைப்படம் "கோங் தாவ்", நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் நான்கு நாட்களில் RM2.2 மில்லியன் வசூலை பதிவு செய்துள்ளது.
மார்ச் 19 முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டுவரும் இந்த மலேசியா-தாய்லாந்து கூட்டு தயாரிப்பு திரைப்படம், தென்கிழக்கு ஆசியாவில் வெள்ளித்திரையில் அரிதாகச் சித்தரிக்கப்படும் மாந்திரிகம் சார்ந்த கதையையும் முன்னிலைப்படுத்துகிறது.
மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து என்ற மூன்று நாடுகளின் நடிகர்களை ஒன்றிணைத்த இந்தத் திரைப்படம், பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கடல்கடந்த ஒத்துழைப்பாக மாறியுள்ளது.
பிலிப் க்யுங், காவ் சுபாசரா தனாசட், யுமி வோங், எரிக் லே, கிளென் யோங் ஆகியோர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை வகிக்கின்றனர். பிரோண்ட் பாலரே, டோனி உசோஃப் என்ற இரண்டு பிரபல உள்ளூர் நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மாந்திரிகனின் கதாபாத்திரத்தை நடித்த பிலிப், தாய்லாந்தில் உள்ளூர் சடங்குகளை ஆழமாக புரிந்துகொள்வதில், குறிப்பாக மொழி, நடிப்பு நுட்பங்கள் அம்சங்களில் சவால்களை எதிர்கொண்டதாக கூறினார்.
"குறிப்பிட்ட உச்சரிப்புகள், அசைவுகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, ஆரம்பத்தில் சற்று மன அழுத்தமாக இருந்தது, ஆனால் படிப்படியாக சுலபமாகிவிட்டது, அனுபவமும் மிகவும் அற்புதமாக இருந்தது" என்று திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
எரிக், திரைப்படத்தில் ஆடை இல்லாத காட்சிகளை நடிப்பதில் உணர்வு ரீதியாகவும் மன சாந்தி ரீதியாகவும் சவால்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.
"ஆனால், நான் இதை ஒரு நடிகனாக புதிய அனுபவமாக கருதுகிறேன்" என்று அவர் கூறினார்.
மறைமுகமான செயல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு இயற்கைக்கு அப்பாற்பட்ட அனுபவங்களை எதிர்கொள்ளும் ஒரு குழுவினரைச் சம்பந்தப்படுத்திய மர்ம சம்பவம் பற்றி இந்த திரைப்படம் கதை சொல்கிறது.
தன் பயிற்சியாளர்களுக்கு அசாதாரண சக்திகளை வழங்கும் திறன் கொண்டதாக நம்பப்படும் ஒரு பழங்கால மாந்திரிகமான கோங் தாவ் சடங்குடன் தொடர்புடைய மர்ம சடங்கிலிருந்து எல்லாமே தொடங்குகிறது.
ஆரம்பத்தில் இது செல்வம், அதிகாரத்திற்கான வழியாக தோன்றினாலும், அழைக்கப்பட்ட ஆவிகள் பழிவாங்கத் தொடங்கும்போது படிப்படியாக பயங்கரமான கனவாக மாறிவிடுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் TOXIC RELATIONSHIP குறித்த வெளிப்படையான பேச்சு
August 8, 2026, 1:45 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள DC திரைப்படம்: அனிருத் இசை சம்பவம்
August 6, 2026, 4:59 pm
புதுச்சேரியில் 3ஆவது உலகத் திரைப்பட விழா: 10 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும்
August 6, 2026, 4:48 pm
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
August 5, 2026, 7:16 am
கஜினி, வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
July 30, 2026, 10:47 am
