நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரட்டப்படும் நிதி வாயிலாக பத்துமலை தமிழ்ப்பள்ளியின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்: தலைமையாசிரியர் சரஸ்வதி

பத்துமலை:

சிற்றுண்டி தினம் மூலம் திரட்டப்படும் நிதியின் வாயிலாக பத்துமலை தமிழ்ப்பள்ளியின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

பள்ளியின் தலைமையாசிரியர் சரஸ்வதி இதனை தெரிவித்தார்.

பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மின்னியல் ரீதியில் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதே வேளையில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பல தளவாடப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இவற்றை எல்லாம் சீரமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் ஆகியவை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சிற்றுண்டி தினத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வின் வாயிலாக கிடைக்கும் நிதி நிச்சியம் பள்ளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இம்முயற்சிகளுக்கு எனது நன்றிகள்.

அதேவேளையில் பத்துமலை தமிழ்ப்பள்ளியின் சிற்றுண்டி தினத்திற்கு அனைவரும் முழு ஆதரவு தர வேண்டும்.

நீங்கள் தரும் அனைத்து ஆதரவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பயன்பெறும் என்று தலைமையாசிரியர் சரஸ்வதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

September 30, 2024, 12:43 am

Suriya KLCC மாலில் தீ

+ - reset