
செய்திகள் மலேசியா
பத்துமலை தமிழ்ப்பள்ளி சிற்றுண்டி தினம்; 10 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்க இலக்கு: ஹரிராஜா
பத்துமலை:
பத்துமலை தமிழ்ப்பள்ளி சிற்றுண்டி தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் இலக்கு கொண்டுள்ளது. அச்சங்கத்தின் தலைவர் ஹரிராஜா இதனை தெரிவித்தார்.
பத்துமலை தமிழ்ப்பள்ளியின் சிற்றுண்டி தினம் வரும் ஜூன் 8ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டு இந்த சிற்றுண்டி தினத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பத்துமலை தமிழ்ப்பள்ளி மின்னியல் போதனா முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த மின்னியல் போதனை முறைக்கு மாற கிட்டத்தட்ட 2 லட்சம் ரிங்கிட்டும் அதிகமான நிதி தேவைப்படுகிறது.
இதற்கு நிதி திரட்டுவது இந்த சிற்றுண்டி தினத்தில் முதன்மை நோக்கமாகும்.
அதேவேளையில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்களிடையே நல்லதொரு நட்புறவை ஏற்படுத்துவது இரண்டாவது நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
உணவு கடைகள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என இந்த சிற்றுண்டி தினம் களை கட்டவுள்ளது.
அதேவேளையில் நாட்டில் புகழ்பெற்ற கலைஞரான காந்தீபனும் எங்களுடன் இணைந்துள்ளார்.
அதன் அடிப்படையில் இந்த சிற்றுண்டி தினம் மிகவும் கோலகலமாக நடைபெறும் என்று நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
ஆகவே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், நல்லுள்ளங்கள், சுற்று வட்டார மக்கள் என அனைவரும் இந்த சிற்றுண்டி தினத்தில் கலந்துக் கொண்டு பள்ளி மேம்பாட்டிற்கு உதவ வேண்டுமென ஹரிராஜா கேட்டுக் கொண்டார்.
இந்த சிற்றுண்டி தினம் குறித்த மேல் விவரங்களுக்கு சங்கத்தின் துணைத் தலைவர் பூவனை 0133532829 தொடர்புக் கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am