நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தல் பிரச்சாரத்தில் சூழ்ச்சி செய்யும் எதிர்க்கட்சிகள்: அமிரூடின் ஷாரி சாடல்

உலுசிலாங்கூர்:

கோல குபு பாரு தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சூழ்ச்சி அணுகுமுறையை கையாண்டு வருகின்றன.

இது அவசியமற்றது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

தேசியக் கூட்டணி குறிப்பாக பெர்சத்து கட்சியினர் மத்திய, மாநில அரசாங்கங்களின் பல்வேறு முயற்சிகளை நியாயமற்றது என்று கூறுகின்றனர்.

குறிப்பாக கடுமையான வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் குறித்து சாடுகின்றனர்.

ஆனால், டான்ஶ்ரீ மொஹைதின்  நிர்வாகத்தில் மக்களின் நிலைமை படுமோசமாக இருந்தததை அவர்கள் மறந்து விட்டனர்.

பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது என கூறுகிறார்கள்.

ஆனால், அவர்கள் பதவியில் இருந்த காலத்தில் விலைகளை கட்டுப்படுத்த தவறிவிட்டனர்.

போதுமான உணவு விநியோகம் இருப்பதை உறுதி செய்யவில்லை.

இப்படி கடந்த காலங்களில் பல தவறுகளை செய்துவிட்டு இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தவறான கருத்துகளை பரப்புகின்றனர்.

இதுவொரு அரசியல் சூழ்ச்சி என்று டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset