நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கோத்தா இடைத்தேர்தலில் வாக்களிக்கும் புதிய மாணவர்கள் தாமதமாகப் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படும்: ஜம்ரி அப்துல் காடிர் 

பெட்டாலிங் ஜெயா: 

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களிக்கும் புதிய மாணவர்கள் அந்தந்தப் பொது பல்கலைக்கழகங்களில் தாமதமாகப் பதிவு செய்ய உயர்கல்வி அமைச்சகம் அனுமதிக்கும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார். 

தேர்தலில் வாக்களிக்கும் புதிய மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 29-ஆம் தேதி வரை தங்களின் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதாக ஜம்ரி ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார். 

மக்கோத்தா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

புதிய மாணவர்கள் வாக்காளர்களாகத் தங்கள் கடமையை நிறைவேற்றுவதை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உயர்கல்வி அமைச்சகம், பொது பல்கலைக்கழக நிர்வாகங்களுடன் இடையே நடத்தப்பட்ட  விவாதங்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட புதிய மாணவர்கள் அந்தந்தப் பொது பல்கலைக்கழகங்களை நேரடியாகத் தொடர்புகொண்டு இதனைத் தெரிவிக்கலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset