நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஏஜென்சிகள், அமலாக்கா இலாகாக்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு அமைச்சரின் அனுமதி பெற வேண்டும் என பிரதமர் உத்தரவு: ஃபஹ்மி

புத்ராஜெயா:

அரசு ஏஜென்சிகள், அமலாக்கா இலாகாக்கள் வெளிநாட்டு பயணங்களுக்கு அமைச்சரின் அனுமதி பெற வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

தேசியக் கடனைக் குறைக்கும் முயற்சியில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஏஜென்சிகள், அமலாக்கா இலாகாக்கள் அந்தந்த அமைச்சர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

நிர்வாகத்தின் அம்சங்களை வலுப்படுத்துவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டுப் பயணங்கள் உட்பட மற்ற அம்சங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் கண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் தேசியக் கடனைக் குறைக்க முயற்சிக்கும் போது, ​​வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட அம்சங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வெளிநாடு செல்ல ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும். 

ஏன் இவ்வளவு தொகை தேவை? சாத்தியம் உள்ளதா? குறைப்பு, சேமிப்பிற்கு இது அவசியமா? என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

ஆகையால் இந்த உத்தரவை பிரதமர் பிறப்பித்துள்ளார் என்று அரசாங்க பேச்சாளருமான ஃபஹ்மி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset