நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த  மேடை அமைத்து தரும் நோக்கில் பாடல் திறன் போட்டி: குணராஜ்

கிள்ளான்:

சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த  மேடை அமைத்து தரும் நோக்கில் சிலாங்கூர் மாநில பாடல் திறன் போட்டி நடத்தப்படுகிறது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குண்ராஜ் இதனை கூறினார்.

தமிழ் கலைஞர்கள் மன்றம், கிள்ளான் வின்வெளி கலை மன்றம், சிலாங்கூர் பாரம்பரிய இசை வாத்திய சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியின் தொடக்க சுற்றுகள் அக்டோபர் 5,6ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

அரையிறுதி சுற்று அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் பிரமாண்ட இறுதி சுற்று வரும் அக்டோபர் 27ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்திய சிறார்களை இசை, பாடல் துறையில் சாதிக்க வேண்டும் என இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இத்துறைகளில் சிறார்களை ஊக்குவிக்க வேண்டும் எனபது அதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 15 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

ஆகவே ஆர்வமுள்ள சிறார்கள் விரைந்து வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதுவரை 60க்கும் மேற்ப்பட்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்துக் கொண்டுள்ளனர்.

பதிவுக்கான இறுதி நாள் செப்டம்பர் 29ஆம் தேதி என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக தங்களிம் பங்கேற்பை பதிவு செய்து கொள்ள வேண்டும் என  குணராஜ்  கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset