நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

68 அரசு ஊழியர்களின் பாரிஸ் பயணம் ரத்து செய்யப்பட்டது: பிரதமர்

பூச்சோங்:

68 அரசு ஊழியர்களின் பாரிஸ் பயணத்தை அரசாங்கம் ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அதிகப்படியான பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக  சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு திட்டமிடப்பட்ட வெளிநாட்டுப் பயணம் ரத்து செய்துள்ளது.

அரசு ஏஜென்சிகளின் வாரியக் குழுவுக்கு இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க அதிகாரம் உண்டும்.

ஆனால் சில சமயங்களில் வாரியம் அவர்களுக்குச் சாதகமாக முடிவுகளை எடுக்கிறதுவ்

ஆகையால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் கடுமையான போக்கை கடைப்பிடிக்கவுள்ளது.

வரும் காலங்களில் அனைத்து புதிய வெளிநாட்டு பயண திட்டங்களும் பொதுச் செயலாளர் அல்லது தலைமை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.

மேலும் இது சம்பந்தப்பட்ட அமைச்சரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

யாரோ ஒருவர் இதற்கு நேரடியாக  பொறுப்பேற்க வேண்டும் என்று பூச்சோங்கில் உள்ள மஸ்ஜித் தாருஸ்ஸலாமில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset