நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நவம்பர் மாதம் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட்மலேசியா 

கோலாலம்பூர்:

செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தெரிவித்துள்ளது. 

மே 17-ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 

நாட்டின் பல பகுதிகளில் பலவீனமான காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையானது இடியுடன் கூடிய மழைக்கு வழிவகுக்குகிறது.

குறிப்பாக மாலை மற்றும் அதிகாலையில் பெரும்பாலான பகுதிகளில் மேற்கு மற்றும் தீபகற்பத்தின் உட்புறம், மேற்கு சபா மற்றும் மேற்கு மற்றும் மத்திய சரவாக் பகுதிகளில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவரும்.

இதுபோன்ற வானிலையால் திடீர் வெள்ளம், மரங்கள் விழுதல் மற்றும் நிலையற்ற கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset