நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

என் தந்தை ஃபாசிலின் பெயரைக் காப்பாற்றி வெற்றி பெறுவேன் என்று நம்பினேன்: ஃபஹத் ஃபாசில்

திருவனந்தபுரம்:

''மோகன்லால், நதியா, பேபி ஷாலினி,  குஞ்சாக்கபோபன்,  நக்மா, குஷ்பூ இவர்கள் எல்லாம், என்  தந்தை இயக்குநர்  ஃபாசிலால்   சினிமாவிற்கு  அறிமுகமாகி  பிரம்மாண்ட வெற்றியைப்  பெற்றவர்கள்.  அவர் அறிமுகப்படுத்தியவர்கள்  தோல்வியுறக் கூடாது என்பதற்காகவே, என்றாவது ஒரு நாள்  திரைத்துறையில்  வெற்றிபெற  விரும்பினேன்' என்று இயக்குநர் பாசிலின் மகனும், நடிகருமான ஃபஹத் ஃபாசில் கூறி இருக்கிறார். 

2002-ம் ஆண்டு இயக்குநர் ஃபாசில் இயக்கிய  'கைஎத்தும் தூரத்து' என்கிற திரைப்படம்  மூலம்  மலையாள திரையுலகிற்குள் ஃபஹத் ஃபாசில் கதாநாயகனாக அறிமுகமானார்.  அப்போது அவருடைய பெயர்  ஷானு. ஆனால், அப்படம்  மிகப்பெரும் தோல்வியடைந்தது.

திரை வாழ்வு முடிவுக்கு வந்தது என்று கருதி  மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்கிற  ஃபஹத், சுமார் எட்டு ஆண்டுகள் கழித்துதான் கேரளா திரும்புகிறார். 
   
''அப்போது எனக்கு ஒரு வேலை தேவையாக இருந்தது. என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவரும்  திரைத்துறை சார்ந்தவர்களாக இருந்ததால், அவர்களுடன்  இணைந்து பணியாற்றி மெது மெதுவாகத் திரைக்கதை எழுதத் தொடங்கினேன்.

அப்போதுதான் கேரளா கபே  என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பார்த்தபின்தான்   இயக்குநர்  சமீர் தாகிர் '''சப்பகுரிஷூ" படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தார்''' என்று ஃபஹத் ஃபாசில் பகிர்ந்திருக்கிறார். 

''அறிமுகப்படம் தோல்வியடைந்ததால் திரைத்துறை வாழ்வின் முதல் பகுதி தடுமாற்றத்துடன் முடிவுக்கு வந்திருந்தாலும்,  திரை வாழ்வின் இரண்டாம் பகுதியில் என்னுடைய நடிப்பை மக்கள் கொண்டாடத் தொடங்கியிருப்பது  ஆச்சரியத்தையும் மகிழ்வையும் அளிக்கிறது.  மக்களின் நம்பிக்கையைப்  பெறுவதற்காக  கடும் உழைப்பைச் செலுத்தத் தொடங்கினேன் ''' என்றும் ஃபஹத் ஃபாசில் நெகிழ்ந்திருக்கிறார். 

''''திரையுலகிற்கு மறுபடி வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றாலும், என் அப்பா அறிமுகப்படுத்திய நடிகர்கள் சோடை போக மாட்டார்கள் என்பதை என்றாவது ஒரு நாள் நிரூபித்துக் காட்ட விரும்பியிருக்கிறேன்'' என்று பெருமிதப்பட்டுள்ளார் ஃபஹத்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset