நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எனது இசை நிகழ்ச்சி அனைவருக்குமானது: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்

கோலாலம்பூர்:

மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி அனைவருக்குமானது என்பதை இசைப்புயல் ஏஆர்ரஹ்மான் இணையவழி நடந்த செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, நிகழ்ச்சி குறித்து அவரிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

முக்கியமாக, கடந்த நிகழ்ச்சியைப் போல் இந்த இசை நிகழ்ச்சியிலும் இந்திப் பாடல்கள் இடம்பெறுமா அல்லது முழுமையான தமிழ்ப் பாடல்களை உள்ளடக்கியிருக்குமா என்ற கேள்வியை நம்பிக்கை முன் வைத்தது. 

அதற்கு, மூன்றரை மணி நேரம் இசை நிகழ்ச்சியில் அரை மணி நேரம் இந்திப் பாடல்களைப் பாடுவதில் தவறென்னவுள்ளது என்று ஏஆர் ரஹ்மான் பதிலளித்தார். 

இந்த இசை நிகழ்ச்சியில், தமிழர்கள் மட்டுமல்லாமல் மலேசியாவில் வெளிநாட்டினர்களும் மலேசியர்களும் கலந்து கொள்வதால் அவர்களுக்காக இந்திப் பாடல் பாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஒரு தமிழர் மற்ற மொழி குறிப்பாக இந்திப் பாடல்களுக்கு இசையமைப்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம் என்றும் அது ஒரு சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, தில் சே இந்தி திரைப்படமாகும். அத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அப்பாடல்களை இந்தி மொழியில் கேட்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.  

ஆக, மூன்றரை மணி நேரம் இசை நிகழ்ச்சியில் பெரும்பாலும் தமிழ் பாடல்கள் இடம்பெறும் என்றும் சில புகழ்பெற்ற ஹிந்தி பாடல்களும் இடம்பெறும் என்றும் இசைப்புயல் உறுதியாகக் கூறினார். 

ஸ்டார் பிளானெட் ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பங்கேற்கும் உலகத் தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 27-ஆம் தேதி புக்கிட் ஜலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset