நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மலேசியாவில் கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா? 

சென்னை:

கோட் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா,  மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில் கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசை வெளியீடு நடைபெறவுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

மேலும் இப்படத்தின் 2ஆவது பாடல் விஜயின் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset