நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஜீ தமிழ் சரிகமபா நிகழ்ச்சிக்கு மலேசியாவைச் சேர்ந்த அருளினி தேர்வு 

கோலாலம்பூர்: 

தமிழ் நாட்டின் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் சரிகமபா பாடல் நிகழ்ச்சிக்கு மலேசியாவைச் சேர்ந்த அருளினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

சரிகமபா சீசன் 4 தொடங்கப்படவிருக்கும் நிலையில் அதன் தேர்வு சுற்று சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்வு சுற்றில் ஜொகூர் மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட அருளினி மலேசியா சார்பாக பாடல் தேர்வு சுற்றில் பங்கெடுத்து தேர்வானார். 

அருளினியின் இனிமைமிகு குரலால் பார்வையாளர்களை நீதிபதிகளையும் கிரங்கடித்தார். சரிகமபா இசை நிகழ்ச்சியின் தேர்வு சுற்றில் அருளினி பாடிய பாடலும் அவர் தேர்வு செய்ய நொடி குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இந்நிலையில் பாடகி அருளினிக்கு நெட்டிசன்களும் பொதுமக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset