நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் கெசினோகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதா ? பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுப்பு 

ஜொகூர் பாரு: 

ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் சூதாட்ட மையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவலைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முற்றிலுமாக மறுத்துள்ளார். 

சூதாட்ட மையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதா என்று பிரதமர் அன்வாரிடம் நிருபர் ஒருவர் வினவியபோது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொன்னதுடன் எக்ஸ் வடிவில் தமது கையை ஊடகவியலாளர்களுக்குக் காண்பித்தார். 

முன்னதாக, 100 கோடி அமெரிக்கா டாலர் மதிப்பில் ஒரு பெரிய சூதாட்ட மையத்தை ஜொகூர் ஃபோரஸ் சிட்டியில் அமைக்க மலேசியா பெரிய வர்த்தக முதலாளிகளிடம் கலந்துரையாடி வருவதாக வர்த்தக இணைய ஊடகமான BLOOMBERG செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அன்வார் இவ்வாறு தெரிவித்திருந்தர். இருப்பினும், டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வாரம் GENTING GROUP, மற்றூம் BERJAYA COORPERATION ஆகிய நிறுவனங்களுடன் சந்திப்பினை நடத்தியிருந்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset