நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் வெளி நாட்டினருக்கு கிடைக்கும் மரியாதைக் கூட நமக்கு இல்லை: ராஜசேகரன் ஆவேசம்

கோலாலம்பூர்:

மலேசியாவில் வெளி நாட்டினருக்கு கிடைக்கும் மரியாதைக் கூட நமக்கு இல்லை.

மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். இராஜசேகரன் இதனை ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய பாரம்பரிய தொழில் துறைகளான முடித் திருத்துவோர், ஜவுளி, நகை பொற்கொல்லர் ஆகிய துறைகளுக்கு 7,500 அந்நிய தொழிலாளர்கள் வழங்கப்பட்டன.

ஆனால் கடுமையான விதிகளால் 300 பேர் மட்டுமே தொழிலாளர்கள் கிடைத்துள்ளனர். இந்நிலை மாற வேண்டும்.

விதிகள் எளிமையாக்கப்பட்டு எங்களுக்கு உடனடியாக அந்நிய தொழிலாளர்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும்.

இந்த நாட்டில் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் கூட எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் உள்ளூரைச் சேர்ந்த எங்களுக்கு கிடைப்பது இல்லை. இது தான் எங்களுக்கு பெரும் வேதனை என்று ராஜசேகரன் கூறினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மிண்டாஸ் புதிய நிர்வாக தேர்தலில் ராஜசேகரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset