நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசா தளர்வு திட்டத்தால் இந்திய, சீன பயணிகளின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது: சைஃபுடின்

புத்ராஜெயா:

விசா தளர்வு திட்டத்தால் மலேசியாவுக்கு வரும் இந்திய, சீன பயணிகளின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுதியோன் இதனை தெரிவித்தார்.

மலேசியாவுக்கு வரும் இந்திய, சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தளர்வு வழங்கப்பட்டது.

இதனால் அந்நாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை முதல் மூன்று மாதங்களில் 78.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் அமலுக்கு வந்த இந்த திட்டத்தை அமைச்சு முறையாக  கண்காணித்து வருகிறது.

இதனால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 861,000 பேரின் வருகையால் இந்த சாதனை மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset