நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோ வீரா சைடி ஜொஹாரி காலமானார் 

மலாக்கா: 

மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோ வீரா சைடி ஜொஹாரி மாரடைப்பு காரணமாக காலமானார். 

மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை 8.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 54 ஆகும். 

தமது இல்லத்தில் மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் விரைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானதாக மாநில அரசு அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது. 

டத்தோ வீரா சைடி ஜொஹாரியின் மறைவிற்கு அரசாங்க தலைமை செயலாளர் டான்ஶ்ரீ முஹம்மத் ஸூக்கி அலி தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset