நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம் 

டெஹ்ரான்:

 ஈரான் மீது இஸ்ரேல் அதிகாலையில் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. 

குறிப்பாக ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. 

இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது. 

இரண்டு நாட்டு மோதல் பெரிய போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

முன்னதாக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. 

அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset