நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹெலிகாப்டர், தனி விமான விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு

புது டெல்லி:

தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் தனி விமானங்கள், ஹெலிகாப்டர் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிரசாரத்துக்காக அரசியல் கட்சிகள் கோடிக் கணக்கில் பணத்தை செலவழித்து ஹெலிகாப்டர், தனி விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் ஒரே நாளில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையே பயணித்து பிரசாரம் செய்கின்றனர்.

Sky-high demand: Politicians drive helicopter rates up 15-20% | Lok Sabha  Elections News - Business Standard

இந்நிலையில், மும்பை புறநகர் துணை தேர்தல் அதிகாரி தேஜஸ் சாமெல் நேற்று அனுப்பியுள்ள உத்தரவில், அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அவற்றில் பயணம் செய்பவர்களின் விவரங்களை பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் அனுப்பலாம்.

இந்த உத்தரவு மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset