நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை VVPAT  SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது எனக் கூறி வழக்கை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய உதவும் VVPAT  SLIPகள் கடந்த 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்தச் சீட்டுகளை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் எனக் கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் விசாரித்து தீர்ப்பளித்தனர்.

அதில், தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மை எந்த விலைகொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் தேர்தலை நடத்துவது மிகப் பெரிய பணி. இது உலகில் வேறு எங்கும் இல்லாத மிகப்பெரிய சவால்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் மேலும் பல நாடுகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவது தேவையற்ற சந்தேகங்களை வளர்க்கும். ஆகையால், மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகப்படுத்தக் கோரிய மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன,

மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாம் அல்லது மூன்றாம் இடம் பெற்ற வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்தால் 5 சதவீத வாக்குகளை எண்ணி ஒப்பீடு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset