நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது

பாட்னா:

பிகாரில் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா புறப்பட்ட ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிகாரின் 5 தொகுதிகளுக்கு நடைபெறும் 3ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றிருந்த அமித் ஷா, பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு, புறப்பட்டார்.

அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் தரையிலிருந்து எழும்பி வானில் பறக்கத் தொடங்கியபோது பலத்த காற்று வீசியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் நிலை தடுமாறி, பின்பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டது.

மேலே எழும்பிய ஹெலிகாப்டர் மீண்டும் தரையை நெருங்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, ஹெலிகாப்டரை சில விநாடிகளில் கட்டுக்குள் கொண்டு வந்த பைலட் மேலே பறக்கும் வகையில் இயக்கினார். இதனால் அதிருஷ்டவசமாக அமித் ஷா விபத்திலிருந்து தப்பினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset