நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் காணொலிகள் வைரல்: நாட்டை விட்டு தப்பி ஓட்டம் 

பெங்களூரு: 

கர்நாடகத்தில் பல பெண்களைப் பாலியல் ரீதியாகச் சீரழித்ததாகக் குற்றம் சாட்டப்படும் முன்னாள் பிரதமர் தேவ கௌடவின் பேரனும்  பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்தது. இவற்றில் ஒரு தொகுதியான ஹாசனில் மீண்டும் இரண்டாவது முறையாக பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக, தேவகௌடாவின் பேரனும் ம.ஜ.த. கட்சித்  தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனுமான  பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்டார்.

இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணா குறித்த பாலியல் குற்றச்சாட்டுகளும், அது தொடர்பான காணொலிகளும் இணையத்தில் கடந்த சில நாள்களாகப் பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பிரஜ்வாலால் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவதால் இதுகுறித்து விசாரிக்க மாநில மகளிர் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். 

காங்கிரஸ் போராட்டம்

இதற்கிடையே, பிரஜ்வாலின் தந்தை ஹெச்.டி. ரேவண்ணாவும் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரேவண்ணாவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ரேவண்ணா அங்கு பணிபுரிந்த 6 பெண்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் அளித்ததையும் அவரின் மகன் பிரஜ்வால் ரேவண்ணாவும் பாலியல் சீண்டல்களைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், பிரஜ்வால் இதை விடியோக்களாக எடுத்து வைத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அப்படி, 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வால் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற தகவல்கள் இணையத்தில் வெளியாகி கர்நாடக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக, ம.ஜ.த. கட்சியுடன் தனது கூட்டணியை கடந்த செப்டம்பர் மாதம் பாஜக அறிவித்தது.

தன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததாலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும் ம.ஜ.த. தலைவர் பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், தன் அந்தரங்க விடியோக்களை செய்தி நிறுவனங்களோ இணையதளங்களிலோ வெளியிடக்கூடாது என்பதற்கான நீதிமன்ற தடை உத்தரவை கடந்த ஆண்டே பிரஜ்வால் ரேவண்ணா பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset