நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

புது டெல்லி:

கடவுள்களின் பெயரைக் குறிப்பிட்டு வாக்குளைச் சேகரிக்கும் பிரதமர் மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்குரைஞர் ஆனந்த் எஸ் ஜோன்ட்லே இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
அதில், உ.பி.யில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ராமர் கோயிலைக் கட்டியதாகவும், பாகிஸ்தானில் உள்ள புனித சீக்கிய குருத்வாராவான கர்தாபூர் சாஹிப்புக்கு வழித்தடம் அமைத்ததாகவும் கூறி பாஜகவுக்கு வாக்குகளைக் கோரினார்.

மேலும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த மதத் துவேஷம் ஏற்படுத்தும் தேர்தல் விதிமீறிய செயலாகும்.

ஆகையால், பிரதமர் மோடியை 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, இந்த மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் தவறாக கருதப்பட்டுள்ளன.

இந்த புகார் மனு மீது தேர்தல் ஆணையத்தின் முடிவு நிலுவையில் இருக்கும்போது நீதிமன்றத்தை அவர் அணுகி இருக்க வேண்டியதில்லை.

விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நியாப்படுத்தவில்லை.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட இயலாது.

இந்த புகார் மீது தேர்தல் ஆணையம் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்று கூறிய மனுவை தள்ளுபடி செய்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset