நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்

லக்னோ: 

உத்தர பிரதேச அரசுப் பல்கலைக்கழக தேர்வில் ஜெய் ஸ்ரீராம் என்று விடையளித்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு உதவிய 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம் ஜவுன்பூர் மாவட்டத்தில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் டி ஃபார்மா படிக்கும் சில மாணவர்கள், முதல் மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகளில் தவறான விடைகளை அளித்தும் தேர்ச்சி பெற்றனர்.

அந்தப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரான திவ்யான்ஷு சிங் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் RTI கீழ் விவரம் கோரினார்.

அப்போது விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் விடைத்தாள்களில் பதில்களுக்கு இடையில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதியும், விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைச் சேர்த்தும் 4 முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி அடைந்தது தெரியவந்தது.  

அந்த மாணவர்கள் 75க்கு 42 மதிப்பெண்கள் பெற்றதாகவும் ஆர்டிஐ பதிலில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் ஆளுநருக்கு அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் சார்பில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆசுதோஷ் குப்தா, வினய் வர்மா ஆகிய 2 பேராசிரியர்கள் விடைத்தாள்களை தவறாக மதிப்பிட்டது கண்டறியப்பட்டதால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset