நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு

புது டெல்லி:

மணிப்பூர் வன் முறை மற்றும் பிபிசி அலுவல கத்தில் நடந்த சோதனைகளை விமர்சித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது,

மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக் கும் குகி பழங்குடியினருக்கும் இடையே சுமார் ஓராண்டாக  கலவரம் நீடித்து வருகிறது. இதில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர்.

மணிப்பூரில் ஏற்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள், அமைதியை நிலை நாட்டுதல், மக்களுக்கு நிவாரண உதவிகள் அளித்தல் உதவுதல் ஆகியவற்றில் இந்திய அரசின் தாமதமான நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் வருடாந்திர அறிக் கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2002-ஆம் ஆண்டு குஜராத் வன்முறைக்கு அப்போதைய மாநில முதல்வரான பிரதமர் மோடியைக் குற்றம்சாட்டி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைக் குறித்தும் அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து  இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமெரிக்கா வின் அறிக்கை ஒருதலைபட்சமானது. இந்தியா குறித்த தவறான புரிதலை அது எடுத்துக்காட்டுகிறது. நாங்கள் அதற்கு மதிப்பளிக்க வில்லை என்றார்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset