நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மே 1 ஆம் தேதி முதல் பேராக் மாநிலத்தில் நீர் கட்டணம் 5 காசாக உயர்வு

ஈப்போ:

மே 1ஆம் தேதி முதல் பேராக் மாநிலத்தில் நீர் கட்டணம் 5 காசாக உயர்வு காணவுள்ளது. அன்றாட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நீர் பிரிவின் கீழ் இந்த கட்ட உயர்வு விதிக்கப்படுகிறது. இதனால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பேராக் மாநிலத்தில் நீர் கட்டணம் உயர்வு காணவுள்ளது.

தேசிய நீர் சேவை ஆணையம் நிர்ணயம் செய்த 22 காசு புதிய கட்டணத்தைக் காட்டிலும் இந்த புதிய விலை என்பது குறைவாக தான் உள்ளது.இதனால் மாநில மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் கூறினார். 

ஒவ்வொரு மீட்டர் கணக்கின் படி பேராக் மாநிலத்தில் 70 காசாக இருந்த நீர் கட்டணம் மே மாதம் முதல் 75 காசாக உயர்வு காணும். இதனால் 21 மீட்டரிலிருந்து 35 மீட்டர் நீர் பயன்பாடு 1.08 ரிங்கிட்டாக நிர்ணயம் செய்யப்படுவதாக மாநில மந்திரி பெசார் அலுவலகம் தெரிவித்தது.

21 முதல் 35 மீட்டர் பாடு கணக்கின் படி இதற்கு முன் இருந்த 1 ரிங்கிட் 03 காசாக இருந்த கட்டணம் மே மாதம் முதல் 1 ரிங்கிட் 08 காசாக உயர்வு காணும். 

அன்றாட பயன்பட்டிற்கான புதிய விலையின் தாக்கத்தைக் குறைக்க, 10 மீட்டர் பாடு வரை நீர் பயன்படுத்துவோருக்கு 40 காசு வரை தள்ளுபடி வழங்க பேராக் நீர் வாரியம் LAP முன்வந்துள்ளது. ஒரு மாதத்திற்கு இந்த தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் தேசிய நீர் சேவை ஆணையமான ஸ்பான் அன்றாட பயன்பாட்டிற்கான நீர் பயன்பாடு பிரிவின் கீழ் புதிய நீர் கட்டணத்தை அறிமுகம் செய்தது. இந்த புதிய நடைமுறை அனைத்து தீபகற்ப மற்றும் லாபுவானிலும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset