நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடின உழைப்பை  மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

உழைத்தால்தான் நாடும், வீடும் நலம் பெற முடியும் எனும் உண்மையை உணர்ந்த அனைத்து உழைப்பாளிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். 

மலேசியாவில் உள்ள  தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துகள் என்று மஇகா துணைத் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உழைக்கும் வர்க்கம் இருப்பதால் தான் மனிதனின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைந்து கொண்டே போகிறது. 

ஆதிகாலம் தொட்டு இன்று வரை வாழ்க்கைத் தரமும், வாழும் விதமும் மேம்பாடடைந்து கொண்டே போகிறது. புதிய புதிய கண்டு பிடிப்புகள். வாழ்க்கையைச் சுலபமாக்கப் பல புதிய வரவுகள். 

உழைக்கும் ஒரு தனிமனிதனின் வளர்ச்சி அந்த குடும்பத்தை உயர்த்தும். குடும்பத்தின் வளர்ச்சி சமூகத்தை உயர்த்தும். சமூகத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். 

தொழில்நுட்பங்கள் கொண்டு வரும் சவால்களை எதிர்கொள்ள நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொழில்புரட்சி 4.0 காலகட்டம் இது. இதில் பல வேலைகள் மனிதவளத்தை நம்பி இராமல், இயந்திரங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை நம்பி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 

உடலை வறுத்தி வேலை செய்யும் அதே வேளையில், அறிவு சார்ந்த சமுதாயமாகவும் நாம் உருவாக வேண்டும். வருங்கால மாற்றங்களைக் கருத்தில் கொண்டு நடைமுறைக்கு ஏற்ப நம்மைப் பல்திறன் கொண்ட திறமைசாலிகளாக உயர்த்திக் கொள்ள வேண்டும். 

இன்றைய நடப்புச் சூழல் அறிந்து, எதிர்காலத் தேவைகளைப் புரிந்து, நமக்கான வாய்ப்பை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

கடின உழைப்பை மூலதனமாகக்கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம். உழைப்பால் உயர்வோம் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset