நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் - கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத் தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் - வி.கே. கே. ராஜசேகரன் நேரடிப் போட்டி

கோலாலம்பூர்:

மலேசியாவில் 95 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலாங்கூர் - கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் அனைத்து பதவிகளுக்கும் இம் முறை கடுமையான போட்டி  நிலவுகிறது.

இதில் நடப்பு தலைவர் நிவாஸ் ராகவனை எதிர்த்து நடப்பு துணைத் தலைவர் வி.கே.கே. ராஜசேகரன் போட்டியிடுகிறார் .

நிவாஸ் ராகவன் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு குமரகுரு போட்டியிடும் வேளையில் ராஜசேகரன் அணி சார்பில் பிரபாகரன் போட்டியிடுகிறார்.

உதவித் தலைவர் பதவிக்கு நிவாஸ் அணி சார்பில் டத்தோ சந்திரசேகரனும் ராஜசேகரன் அணி சார்பில் பன்னீர் செல்வம் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு நிவாஸ் ராகவன் அணி சார்பில் டத்தின் மகேஸ்வரியும் ராஜசேகரன் அணி சார்பில் செல்வராஜும் போட்டியிடுகிறார்கள்.

சங்கத்தின் 14 உச்சமன்ற பதவிகளுக்கும் இரு அணிகள் சார்பில் கடும் போட்டி நிலவுகிறது.
 
நிவாஸ் ராகவன் அணி சார்பில் ராம்குமார், குணராஜ், சண்முக செல்வி,மோகனா சின்னத்தம்பி, முகமட் ராபி, எம்.பி.இராமன், பிரபாகரன் கோவிந்தன், செல்வராசு ஹரிகிருஷ்ணன், கவிவாணன் சுப்பிரமணியம், கவிமாறன், நாகராஜன், அமுதா முனியாண்டி, ராம்குமார், பெருமாள் இராமன், குளோரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் நவமணி, டாக்டர் சித்ரா, பால்மிரா பிபி, டத்தோ டாக்டர் சுகுமாறன், டாக்டர் ராஜசேகரன் மோகன், டத்தோ  சி.எம். விக்னேஸ்வரன் , டாக்டர் மரியா ரூபினா, பிரவின் தமிழ் செல்வம், குட்டி கிருஷ்ணன் ராயர்,  டோனி கிளிபெர்ட், , மீனாட்சி கல்யாண சுந்தரம், போட்டியிடுகிறார்கள்.

ஜமுனா சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் ஆண்டுக் கூட்டமும் தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் குழுத் தலைவர்  வழக்கறிஞர் ராஜசுந்தரம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset