நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ருவாங் எரிமலை வெடிப்பை தொடர்ந்து சபா, சரவா மாநிலங்களுக்கான விமான சேவை ரத்து

கோலாலம்பூர்:

ருவாங் எரிமலை வெடிப்பை தொடர்ந்து சபா, சரவா மாநிலங்களுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவின்  ருவாங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து உள்ளூர் விமான சேவைகள் ரத்தாகி உள்ளது.

குறிப்பாக மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா ஆகிய நிறுவனங்கள் கோலாலம்பூரில் இருந்து சபா, சரவா மாநிலங்களுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சபா மாநிலத்திற்கான 11 விமான சேவையை ரத்து செய்தது.

அதே போன்று சராவா மாநிலத்திற்கான 8 சேவைகளை நிறுத்தியது.

இந்நிலையில் மலிவு விலை விமான நிறுவனமாக ஏர் ஆசியா அவ்விரு மாநிலங்களுக்கான 16 சேவைகளை ரத்து செய்தது.

ருவாங் எரிமலை வெடிப்பு நிலவரம் தொடர்ந்து கண்கானிக்கப்படும்.

மேலும் பயணம் ரத்து செய்யப்படுவது பற்றிய கூடுதல் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என்று அவ்விரு விமான நிறுவனங்களும்  கூறியுள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset