நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டங்கள் இப்போது மக்களை அச்சுறுத்துகிறது: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

நாட்டில் சட்டங்கள் இப்போது மக்களை அச்சுறுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இதனை தெரிவித்தார்.

இப்போது அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு இணங்கத் தவறிய எந்தவொரு தரப்பினருக்கு சட்டங்கஅச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது.

அதே வேளையில் அவர்களுக்கு எதிரான கோரிக்கைகளை நிறைவேற்றுவது மிகவும் கடினம்.

இந்த செயல்முறைக்கு கடந்த 40 ஆண்டுகளில் நடந்த அனைத்து பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை தேவை என்று அவர் கூறினார்.

பெரும்பாலான மக்கள் நீண்ட காலமாக தங்கள் செயல்பாடுகளின் பதிவுகளை வைத்திருப்பதில்லை. 

ஆனால், எந்தச் செயலையும் புகாரளிக்கத் தவறினால், வேண்டுமென்றே தகவல்களைத் தடுத்து நிறுத்துவது என்று அர்த்தம் கொள்ளலாம்.

இது  நீண்ட கால சட்ட நடவடிக்கையை விளைவிக்கலாம். அது சிறைவாசத்தையும் விளைவிக்கலாம். 

அதுதான் அச்சுறுத்தல் என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset