நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் கடும் வறுமைக்கு ஜூலை மாதத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும்: மந்திரி புசார் அமீருடீன்

உலு சிலாங்கூர்:

சிலாங்கூரில் கடும் வறுமைக்கு வரும் ஜூலை மாதத்திற்குள் 
முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இது தான் மாநில அரசின் இலக்கு என்று மந்திரி புசார் அமீருடீன் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் அரசாங்கம் வரும் ஜூலை மாதத்திற்குள் மாநிலத்தில் கடுமையான வறுமைக்கு முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிலத்தில் 861 குடும்பங்கள் இன்னும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாக சிலாங்கூர் மேம்பாட்டு நடவடிக்கை வாரியம்  அளித்த விளக்கத்தின் அடிப்படையில் இது கூறப்பட்டது.

சிலாங்கூரில் செழிப்பான வாழ்க்கை உதவி நிதியின் வாயிலாக மாதத்திற்கு 300 ரிங்கிட் உதவியாக வழங்குமாறு மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

அவர்களில் சிலர் ஒவ்வொரு மாதமும் வறுமைக் குழுவிலிருந்து வெளியேற தங்கள் வருமானத்திற்கு 17 ரிங்கிட் கூடுதலாகத் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset