நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிள்ளைகளுக்கான கல்வியைத் தேர்வு செய்வது பெற்றோரின் உரிமை: நிக் நஸ்மி

கோல குபு பாரு:

பிள்ளைகளுக்கான கல்வி முறையை  தேர்வு செய்வது பெற்றோர்களின் தனிப்பட்ட உரிமை.

இது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று கெஅடிலான் உதவித் தலைவர் நிக் நஸ்மி கூறினார்.

தேசியப் பள்ளிகளை  மேம்படுத்துவதில் மத்திய அரசு எப்போதும் உறுதிபூண்டுள்ளது.

ஆனால், குழந்தைகளுக்கான கல்வித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது பெற்றோரின் உரிமையாகும்.

கிளந்தான் உட்பட தேசிய வகைப் பள்ளிகளில் நுழையும் மலாய் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆகவே பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும்  அஹ்மத் ஃபத்லி ஷாரி, 

நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சாக் தாவோவுக்கு தனது ஆரம்ப, இடைநிலைக் கல்விப் பின்னணியைக் கூறி சவால் விடுவது அநாகரீகம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset